ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி நடிக்கிறார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் தகர்க்க முடியாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் துவங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதைக் கொண்டாடும் விழா கடந்த ஜூலை 26-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இதில், நடிகர் கமல்ஹாசன், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது, மேடையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி நடிக்கிறார் ‘ என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனராக யார் இருப்பார்? எனரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. எனினும், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்குவார் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகிறது.