Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடு..!

    தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடு..!

    தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 525 நூலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான நூலகங்கள் மிகவும் பழமையானவையாகவும், சில நூலகங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது என்பதால் அவற்றை உடனடியாக புதுப்பித்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    சமூக ஆர்வலர்களின் இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை கடந்த ஆண்டு ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

    அதன் முதல் கட்டமாக 2021-22ம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள நூலகங்கள் 2024-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க திட்டமிடுகிறாரா முகேஷ் அம்பானி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....