Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இடிப்பு..

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இடிப்பு..

    துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணிதொடங்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. 

    துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது. இதுவரையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரித்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், இந்நிலநடுக்கத்தால் முடுக்கவிடப்பட்ட மீட்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கட்டிடங்களை தகர்க்கும் பணிகள் துருக்கியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணியில் துருக்கியில் மட்டும் பல்வேறு பகுதிகளில் ஒருலட்சத்து 60 ஆயிரம் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. 

    இந்நிலையில், துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணிதொடங்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான டெண்டர்கள், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ‘என் கடினமான நாட்களில் தோனி மட்டுமேதான் என்னை தொடர்புக்கொண்டார்’ – விராட் கோலி உருக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....