Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்'பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை ', முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க 5000 பணியாளர்கள் போராட்டம்

    ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை ‘, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க 5000 பணியாளர்கள் போராட்டம்

    திமுகவின் தேர்தல் வாக்குறுதியான, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தலைமை செயலக பணியாளர்கள், முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றினர்.

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கை அடங்கிய அட்டையை, சட்டையில் குத்தியவாறு இன்று முதல் மூன்று நாட்களுக்கு பணியாற்ற உள்ளனர்.

    மத்திய அரசு 1.7.22 முதல் வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியினை வழங்க வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கபட்டுள்ள சரண் விடுப்பினை வழங்க வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை அட்டையை அணிந்து கொண்டு, முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க 5000 பணியாளர்களும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க இந்த முதல் கட்ட நடவடிக்கைகள் கோரிக்கை அட்டையை அணிந்துள்ளோம், முதலமைச்சர் பரிசிலிப்பார் என நம்புவதாகவும், ஒருவேளை இல்லாவிட்டால் செயற்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை அறிவிப்போம் எனக் கூறினார்.

    கிறிஸ்த்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்காக அறிமுகமாகும் கேக்! ஆவின் நிர்வாகத்தின் புதிய முயற்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....