Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆயுத பூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    ஆயுத பூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    தமிழகத்தில், ஆயுத பூஜை பண்டிகையையொட்டி, இன்றும், நாளையும் 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    நாளையும், நாளை மறுநாளும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக உள்ளன. அதேபோல் தசரா பண்டிகை அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் பலரும், இன்று முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் பயணிக்க ஏதுவாக இன்றும், நாளையும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    அந்தவகையில், கோயம்பேடு உள்ளிட்ட 3 முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து இன்றும், நாளையும் 3,700 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகின்றன. 

    ஆயுத பூஜை விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்து நிலையங்கள் அறிவிப்பு!

    அதன்படி தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 

    திண்டிவனம் வழியாகத் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போரூர்,சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சு ,மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்,சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ,மேலும் புதுச்சேரி சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் மாநகர போக்குவரத்துக் கழகம் பூந்தமல்லி பணிமனை அருகிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 

    வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இந்த இடத்திலிருந்து இயக்கப்படும். 

    மற்ற ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....