Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா3 ஊசி போட்டலும் ஜாக்கிரதை! சிறுமியின் உயிர் பறித்த ரேபிஸ், தடுப்பது எப்படி?

    3 ஊசி போட்டலும் ஜாக்கிரதை! சிறுமியின் உயிர் பறித்த ரேபிஸ், தடுப்பது எப்படி?

    கேரள மாநிலத்தில் தெரு நாய் கடித்து, 12 வயது சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலங்களாக கேரளாவில், தடுப்பூசி செலுத்திய பின்னரும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது பெரும் அச்சுறுத்தல்களையும் உண்டாக்கி வருகிறது.

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மயிலபுறம் பகுதியைச் சேர்ந்தவர் 12 வயதான அபிராமி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி காலை கடைக்கு பால் வாங்கச் சென்ற போது அங்கிருந்த தெருநாய் ஒன்று அவரை கடித்துள்ளது. இதில் கை, கால், கண், முகம் என ஆறு இடங்களில் அபிராமிக்கு காயம் ஏற்பட்டது. தெருநாய் கடித்தது என்று தெரிந்ததும் அபிராமியின் தந்தை ஹரிஷ் தன் மகளை உடனடியாக பத்தினம் திட்டா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு வெறிநாய் கடிக்கான ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது .

    இதனையடுத்து அடுத்தடுத்து போட வேண்டிய இரண்டு தவணை தடுப்பூசிகளை, சரியான தேதியில் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அபிராமி போட்டுள்ளார் . 4-வது தவணையாக போடவேண்டிய தடுப்பூசி இந்த மாதம் 10-ம் தேதி செலுத்த வேண்டி இருந்ததுள்ளது . இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர்-1) சிறுமி அபிராமிக்கு திடீரென உடல் நிலை மிகவும் மோசமடையவே, அவசர அவசரமாக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கான மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டும், மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுமி அபிராமி உயிர் இழந்தார்.

    ரேபிஸ் தடுப்பூசி சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட காலங்களில் சரியாக போட்டும் இதுபோன்ற மரணங்கள் நிகழ்வது என்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருந்தது. தற்போது அபிராமி போன்று தொடர்ந்து நிறைய மரணங்கள் அடிக்கடி நிகழ்வது கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .

    அதற்கு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு (மே மாதம் 30-ம் தேதி) அதே கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்காரா என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ லெட்சுமி என்ற 18 வயது கல்லூரி மாணவி தெரு நாய் கடித்து உயிரிழந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த நிலையில் கல்லூரிக்குச் செல்லும் வழியில் நாய் ஒன்று இவரைக் கடித்தது. உடனே ரேபிஸ் தடுப்பு மருந்தையும் எடுத்துக் கொண்ட ஸ்ரீ லெட்சுமி அதன் பின்னர் எந்த அறிகுறியும் இல்லாமல் இயல்பாகவே இருந்து வந்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து ஸ்ரீ லெட்சுமியும் அபிராமியை போலவே திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் .

    சில மருந்துகள் சிலரது உடம்பிற்கு பலனளிக்காமல் போவதால், வைரஸ் மூளைக்கு பரவி இதுபோன்ற மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிகின்றனர். இதனால் கேரள மக்கள் தெருநாய்களைப் பார்த்தாலே மிகவும் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதோடு தெருநாய்களால் மக்களுக்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அவற்றை பிடிக்க அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர் .

    இதையும் படிங்க : கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் ! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....