Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு23 அடி உயரத்தில் பிரமாண்ட நடராஜர் சிலை! ஆச்சர்யத்தை உண்டாக்கிய வடிவமைப்பாளர்

    23 அடி உயரத்தில் பிரமாண்ட நடராஜர் சிலை! ஆச்சர்யத்தை உண்டாக்கிய வடிவமைப்பாளர்

    தமிழகத்தை சேர்ந்த சிலைவடிக்கும் சிற்பி திரு.வரதராஜன் ஒரு மாபெரும் நடராஜர் சிலையை வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கிராமம் தான் திம்மக்குடி. அந்த கிராமத்தில் திரு.வரதராஜன் என்பவர் சிற்பம் செய்து வருகிறார். இதற்கு முன்பு பல்வேறு சிற்பங்களை செய்து சாதனை படைத்துள்ளார். குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள அணு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 11 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, 23 அடி உயர நடராஜர் சிலை ஆனந்தத் தாண்டவம் ஆடும் வகையில் வடிவமைக்க திட்டமிட்டு வேலையை தொடங்கினார். இடையில் பொருளாதார இழப்பு காரணமாக சிலை செய்யும் வேலையில் தொய்வு ஏற்பட்டது. பின்பு வேலூர் மாவட்டம் நாராயணீ சக்தி பீடத்தின் உதவியுடன் மீண்டும் வேலை தொடங்கப்பட்டது.

    இதன் பயனாக தற்போது ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் சிலை 23 அடி உயரம் 17 அடி அகலம் 15 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இச்சிலையானது பத்து ஆண்டுகள் நிறைவில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 25,000 சிற்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பைக் கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சிலையின் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது இந்த சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இதையும் படிங்க: அரசின் நடவடிக்கையால் மீட்கப்பட்ட நிலம் – இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

    இதில் சிவனடியார்கள் முன்னிலையில் விபூதி, பால், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகளும் காட்டப்பட்டது . அந்த சமயத்தில் 20க்கும் மேற்பட்ட வெண்புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன.

    இதனை தொடர்ந்து விழாவில் முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் முதல் அபிஷேகத்தை தொடங்கி வைத்து சிலை வடிவமைப்பில் மனிதனின் பங்கு எவ்வளவு அளப்பரியது என்பது குறித்து நெகிழ்வாக பேசினார்.

    பின்னர், உதிரி ரோஜா பூக்கள் தூவ, இந்த பிரம்மாண்டமான சிலையை முறைப்படி லட்சுமி நாராயணி பீட அறங்காவலர்களிடம் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்படைத்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....