Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 2 கிலோ, 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் இன்று அறிமுகம்; விலை எவ்வளவு தெரியுமா?

    தமிழகத்தில் 2 கிலோ, 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் இன்று அறிமுகம்; விலை எவ்வளவு தெரியுமா?

    2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று அறிமுகப்படுத்த உள்ளார். 

    இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர்கள் இன்று முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நகர் கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவுத்துரை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று அறிமுகப்படுத்த உள்ளார். 

    இடம் பெயரும் தொழிலாளர்கள் ,நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கும் விதமாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வர உள்ளது. 

    இதையும் படிங்க:துர்கா பூஜையின்போது ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட மக்கள்; அதிர்ச்சி வீடியோ

    2 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டருக்கு ‘முன்னா’ என்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘சோட்டு’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கேஸ் சிலிண்டர்களை பெற இருப்பிடச் சான்றிதழ், முன்பணம் கட்டத் தேவையில்லை. ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் மட்டும் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 கிலோ “முன்னா” ரக சிலிண்டரின் விலை ரூ.961.50 புதிய இணைப்பிற்கும், சிலிண்டர்களை நிரப்புவதற்கு (refill) ரூ.253.50-ம், என்றும், 5 கிலோ “சோட்டு” சிலிண்டரின் விலை ரூ.1528/- புதிய இணைப்பிற்கும், சிலிண்டர்களை நிரப்புவதற்கு (refill) ரூ.584/- என்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த இலகு ரக கேஸ் சிலிண்டர்களை கீழ்க்கண்ட சங்கங்களின் சுயசேவைப் பிரிவுகளில் விற்பளை செய்யப்படவுள்ளன. 

    1. திருவல்லிக்கேணி சுயசேவைப் பிரிவு,
    2. தேனாம்பேட்டை சுயசேவைப் பிரிவு, 
    3. கீழ்ப்பாக்கம் சுயசேவைப் பிரிவு,
    4. இராஜா அண்ணாமலைப்புரம் சுயசேவைப் பிரிவு 
    5. இராயப்பேட்டை சுயசேவைப் பிரிவு 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....