Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு2 மனைவிகளுக்கும் ஒரே பெயர்... ஆள் மாறாட்டம் செய்த அதிமுக நிர்வாகிக்கு 6 ஆண்டுகள் சிறை!

    2 மனைவிகளுக்கும் ஒரே பெயர்… ஆள் மாறாட்டம் செய்த அதிமுக நிர்வாகிக்கு 6 ஆண்டுகள் சிறை!

    மணப்பாறையில் முதல் மனைவி பெயரில் இருந்த சொத்தை அபகரித்த அதிமுக பிரமுகருக்கும், அவரது 2-வது மனைவிக்கும் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 60 வயதாகிறது. இவர் அதிமுக மணப்பாறை வடக்கு ஒன்றிய துணைச் செயலர் ஆவார். இவரது மனைவி ஆர். நிர்மலாதேவி இவருக்கு வயது 50. இவர் மணப்பாறையை அடுத்த ராஜீவ் நகர் பகுதியில் வசிப்பவர். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார் .

    இந்த நிலையில் , சந்திரசேகர், இரண்டாவதாக சி. நிர்மலாதேவி என்பவரை திருமணம் செய்து  போடுவார்பட்டியிலும் வசிக்கிறார். இதையடுத்து, கடந்த 2011 நவம்பவர் 15-ம் தேதி சந்திரசேகர் தனது பெயரில் இருந்த காலி மனை ஒன்றை முதல் மனைவியான ஆர். நிர்மலாதேவிக்கு தான செட்டில்மெண்ட் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார். 

    இந்நிலையில், கணவர், முதல் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இரண்டாம் மனைவியான சி. நிர்மலாதேவியை மணப்பாறை சார் பதிவாளரகம் அழைத்துச் சென்ற சந்திரசேகர், முதல் மனைவி பெயரில் இருந்த காலிமனையை இரண்டாவது மனைவியை கொண்டு முதல் மனைவியாகக் கையொப்பமிட்டு பத்திரப் பதிவு செய்து தான செட்டில்மெண்ட் பெற்றுள்ளார்.

    இந்த தகவலறிந்த முதல் மனைவி அளித்த புகாரின்பேரில் காவல்துறை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கானது மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் சி. கருப்பச்சாமி, சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பத்திரப் பதிவுக்கு சாட்சிகளாக சென்ற நேரு, சின்னதுரை ஆகியோரை விடுவித்தும் உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: வடிவேலு பட பாணியில் ‘அரசு மருத்துவமனையை காணவில்லை’ என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....