Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா17 வயதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

    17 வயதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

    17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் வாக்களிக்க தகுதியான 18 வயது நிரம்பியதும் (ஜனவரி 1-ம் தேதிப்படி) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கப்படுவது வழக்கம். 

    இந்நிலையில், 17 வயது நிரம்பியவர்கள் முன்னதாகவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும், 18 வயது பூர்த்தியாக ஜனவரி 1-ம் தேதி வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது பெயர், உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களும் அது சார்ந்த, அதிகாரிகளும் இதுகுறித்த தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இருவரும் இணைந்து உத்தரவிட்டுள்ளனர்.

    எலான் மஸ்க்கிடம் ட்விட்டரை விற்பது தொடர்பாக வாக்கெடுப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....