Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரம் பறவைகள் தங்கி இருப்பதாக கணக்கெடுப்பின் வாயிலாக தெரியவந்துள்ளது. 

    தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் தங்கி இருக்கும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணியினை தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். 

    அந்த வகையில், சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. குறிப்பாக காரப்பாக்கம், பெரும்பாக்கம் உள்பட 9 இடங்களில் வனத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுடன் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கலந்து கொண்டனர். 

    tamilnadu bird census at pallikaranai

    இந்தக் கணக்கெடுப்பானது பள்ளிக்கரணை சதுப்பு நில வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாகக் காணப்பட்டன. குறிப்பாக ஊசி வால் வாத்து, தட்டை வாயன், சிறவி, கிளுவை, கருவால் மூக்கன் போன்ற வெளிநாட்டு பறவை இனங்கள் காணப்பட்டன. 

    இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 130 வகையான 26 ஆயிரத்து 178 பறவைகள் தங்கி இருப்பது கண்டறியப்பட்டது. 

    வெளியான ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடல்; அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....