Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்- போக்குவரத்துத்துறை தகவல்

    சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்- போக்குவரத்துத்துறை தகவல்

    தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரை 1.65 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

    தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மேலும், அதற்கு அடுத்தநாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தீபாவளிக்கு முன்தினம் இரண்டு நாட்களும் விடுமுறை நாட்களாக உள்ளதால் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நேற்று முதல் புறப்பட்டு செல்கின்றனர். 

    இதன் காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்கு ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், நேற்று முதல் வருகிற 23 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    அந்த வகையில், கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான அரசு விரைவு பேருந்து பயணசீட்டு முன்பதிவு தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்திருந்தனர். 

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரை சென்னையில் 3,300 பேருந்துகளிலிருந்து 1.65 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: வாரிசு திரைப்படத்தின் புது அப்டேட்…ஜாலி பண்ணும் விஜய்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....