Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்பழங்கால பாத்திர கண்காட்சியாக மாறிய திருமண வரவேற்பு! பார்வையாளர்களை பரவசப்படுத்திய நிகழ்வு!

    பழங்கால பாத்திர கண்காட்சியாக மாறிய திருமண வரவேற்பு! பார்வையாளர்களை பரவசப்படுத்திய நிகழ்வு!

    புதுச்சேரியில் பழங்கால பாத்திர கண்காட்சியாக மாறிய திருமண வரவேற்பு நிகழ்ச்சி. பார்வையாளர்களை பரவசப்படுத்திய முன்னோர்களின் பாரம்பரிய வீட்டு உபயோக பயன்பாட்டு பொருட்கள்.

    இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வாழ்வு முறை, உணவு முறைகளை பரபரப்பான இந்த தொழில்நுட்ப காலத்தில் நாம் ஒதுக்கிவிட்டு புதுப்புது நோய்களுடன் வாழப்பழகி கொண்டோம். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் வழி வழியாக நம் முன்னோர் பயன்படுத்திய உழக்கு, படி, மாகானி, மரக்கால், செப்புக் குடங்கள், வெண்கல தூக்குகள், உணவருந்தும் தட்டுகள், விளக்குகள் போன்றவற்றை மறந்தே போய் விட்டோம். தற்போது உள்ள வாழ்வியல் முறையில் இல்லற பயன்பாட்டில் உபயோகப்படுத்தும் பாத்திர வகைகள் சில்வர் பாத்திரங்களாக மாறி தற்போது பிளாஸ்டிக் சமையல் பாத்திர பயன்பாட்டிற்கு நாம் வந்து விட்டோம்.

    புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய உலோக வீட்டு உபயோக பயன்பாட்டு பொருட்களை கண்காட்சியாக வைத்தது முன்னோர்களின் உணவு பாதுகாப்பு தன்மையை பயன்பாட்டை நினைவு கூர்ந்த மணமக்களின் செயல்பாட்டை அனைவரும் பாராட்டினர். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் கீதா அவர் தனது மகன் விஜய்க்கு பெங்களூரை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணை திருமணம் முடித்தார். வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

    புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியர் அய்யனார் என்பவர் முன்னோர்கள் பயன்பாட்டில் இருந்த பாரம்பரிய பித்தளை, செம்பு உலகத்திலான வீட்டு உபயோக பொருட்களை தனது வீட்டில் பாதுகாத்து பொக்கிஷமாக வைத்துள்ளார். இப்பொருட்களை விஜய், மதுமிதா மணமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பார்க்க கண்காட்சியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய பழங்கால வீட்டு உபயோக பயன்பாட்டு பொருட்களை எடுத்து பார்த்து தங்களின் இளமைக்கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் தங்களது முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த பாரம்பரிய பொருட்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மணமக்களின் இந்த முயற்சியை பலரும் பாராட்டினர்.

    ‘சிவப்பு சிங்காரி..அழகு மாயக்காரி’ – ஸ்ரேயாவின் அசத்தும் புகைப்படங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....