Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்“நான் ஹீரோ இல்ல..... மக்களே நம்பாதீங்க” - யோகிபாபு போட்ட ட்விட்

    “நான் ஹீரோ இல்ல….. மக்களே நம்பாதீங்க” – யோகிபாபு போட்ட ட்விட்

    தாதா திரைப்படம் போஸ்டர் குறித்து யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

    நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் மக்களின் மனதில் பதிந்திருப்பவர்களுள் ஒருவர், யோகிபாபு. சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு தனி அடையாளம் உருவாகிவிட்டதென்றால் அது மிகையாகாது.

    யோகி பாபுவிற்கு ரசிகர்கள் மத்தியில் அடையாளம் உருவானதால், இவர்  கதாநாயகனாக நடிக்காவிட்டாலும், அவரை முன்னிறுத்தி சில திரைப்படங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. இதற்கு யோகிபாபு கண்டனம் தெரிவித்ததோடு, நான் கதாநாயகன் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், இப்படியான ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. அதன்படி, சென்னை 28 பட நடிகர் நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கும் தாதா படம், டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் விளம்பர பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தாதா படம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

     இதைக்கண்ட யோகி பாபு அதற்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் ஹீரோ இல்ல. இந்த படத்தின் நிதின் சத்யா தான் ஹீரோ. நான் அவருடைய நண்பராக நடித்து இருக்கிறேன். நான் ஹீரோ இல்ல மக்களே நம்பாதீங்க” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

    பெயர்ப்பலகையில் ஏன் இந்த பெயர் மாற்றம்? இந்தி திணிப்பா? தமிழ் மறைப்பா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....