Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கப் பதக்கங்களை அள்ளும் இந்திய வீரர்கள்!

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கப் பதக்கங்களை அள்ளும் இந்திய வீரர்கள்!

    பிரான்ஸ் நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான பாரா துப்பாக்கிச் சுடும் உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது. இந்த உலக கோப்பை பிரத்யேகமாக மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

    நேற்று நடைபெற்ற பெண்களுக்கான R2- 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ். ஹெச் 1 பிரிவில் அவனி லெகரா பங்கேற்றார். இவர், 250.6 புள்ளிகளைப் பெற்று தனது சாதனையையே முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 249.6 என்கிற புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தார். தற்போது தனது சாதனையை தானே மீண்டும் முறியடித்திருக்கிறார். இந்த சாதனையின் மூலமாக அவர் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீஹரி தேவராட்டி என்ற வீரர், கலப்பு 10 மீ ஏர் ரைபிள் எஸ்எச் 2 இறுதிப் போட்டியில் மொத்தமாக 253.1 ஷாட்களுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேபோல, இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஆகிய இருவரும், பி6 – 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிக்கான போட்டியில் 565 புள்ளிகளைப் பெற்று, தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர். இந்த இணையும் முன்பிருந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனையை படைத்திருக்கிறது. இவர்கள் இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த யாங் சாவோ மற்றும் மின் லியை வீழ்த்தி தங்கப்ப தக்கத்தை கைப்பற்றினர்.

    பிரான்ஸ் நாட்டின் சாட்ரூரோக்ஸில் நடைபெற்று வரும், பாரா துப்பாக்கிச் சுடும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர்களான அவனி லெகாரா, ஸ்ரீஹரி தேவராட்டி, கலப்பு அணி ஜோடியான ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஆகியோர் இதுவரை தங்கப் பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். பாரா துப்பாக்கிச் சுடும் உலக கோப்பை போட்டியில் இதுவரை, இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....