Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாழடைந்த கிணறு.. 40 அடி ஆழம்; தவறி விழுந்த பெண்ணின் கதறல் கேட்டு பொதுமக்கள் செய்த...

    பாழடைந்த கிணறு.. 40 அடி ஆழம்; தவறி விழுந்த பெண்ணின் கதறல் கேட்டு பொதுமக்கள் செய்த செயல்

    சென்னை மூலக்கடை அருகே பாழடைந்த கிணற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

    மீஞ்சூர் நெய்தவாயல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு வயது 38. இவர் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில் நேற்று இரவு அவர் வழக்கம் போல் வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக மூலக்கடை பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். 

    அப்போது அவர் சிறுநீர் கழிப்பதர்க்காக அருகில் இருந்த இருட்டான பகுதிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தார். மேலும் கிணற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அவருக்கு அதிக காயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து அவர், கத்தி கூச்சல்லிடவே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தனர். பிறகு அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். 

    தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் விஜயலட்சுமியை உடனடியாக மீட்டனர். அப்போது விஜயலட்சுமிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பிறகு அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதையும் படிங்க: பாலியல் ரீதியாக துன்புறுத்தி ‘ராகிங்’ செய்த சீனியர்கள்; வேலூர் சி.எம்.சி விடுதியில் மாணவர்கள் அட்டகாசம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....