Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇன்று 2-வது இருபது ஓவர் போட்டி; வெற்றியைத் தொடருமா இந்தியா?

    இன்று 2-வது இருபது ஓவர் போட்டி; வெற்றியைத் தொடருமா இந்தியா?

    இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 2-வது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தின் முதல்படியாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இத்தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்திய அணி களம்காண தயாரானது.

    இதைத் தொடர்ந்து, கடந்த ஜுலை 29-ம் தேதி மேற்கிந்திய தீவுகளில் உள்ள லாரா மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதலாது இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. 

    அதன்படி, முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டிக்கான ஆட்ட நாயகன் விருது 19 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக்கு வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) இரண்டாவது இருபது ஓவர் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது, இன்று இரவு 8 மணியளவில் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் சேஸிங்கிற்கு ஏற்றது என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    போட்டியில் விளையாட உள்ள அணி வீரர்களின் பட்டியல்:

    இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங்

    மேற்கிந்திய தீவுகள் அணி: ஷமர் ப்ரூக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், நிக்கோலஸ் பூரான் (கேப்டன்), கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ஒடியன் ஸ்மித், கீமோ பால், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்

    காமன்வெல்த் போட்டி; இந்தியாவுக்கு முதல் பதக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....