Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'ஓய்வுக்குப் பிறகு போதைக்கு அடிமையானேன்' முன்னாள் கிரிக்கெட் வீரர் சொன்ன அதிர்ச்சி தகவல்

    ‘ஓய்வுக்குப் பிறகு போதைக்கு அடிமையானேன்’ முன்னாள் கிரிக்கெட் வீரர் சொன்ன அதிர்ச்சி தகவல்

    முதல் மனைவி ஹூமாவின் மரணத்திற்கு பிறகே நான் என் போதைப்பழக்கத்தை நிறுத்தினேன் என கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான வாசிம் அக்ரம் கடந்த 2003-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். புகழ்பெற்ற வேக்ப்பந்து வீச்சாளரான இவர் கிரிக்கெட் விளையாடிய காலக்கட்டத்தில் 900 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    இவரின் பந்துவீச்சுக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இவர் கோகைன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியதாக தனது வாழ்க்கை வரலாற்று நூலில் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இது தற்போது பலரின் கவனத்தையும் இழுத்துள்ளது. 

    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியப் பிறகு ‘இங்கிலாந்தில் நடந்த ஒரு விருந்தில் எனக்கு தரப்பட்டது. அப்போது இந்த பழக்கம் தொடங்கியது. இந்த பழக்கம் என்னுள் தீவிரமாக வளர்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார. 

    மேலும், அவரது முதல் மனைவி ஹூமாவின் மரணத்திற்கு பிறகே வாசிம் தனது போதைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வாசிமின் முதல் மனைவி ஹுமா 2009ஆம் ஆண்டு அரிய வகை பூஞ்சை தொற்று பரவியதில் திடீரென உயிரிழந்தார்.

    “இறுதியில் ஹுமாவின் சுயநலமற்ற, சுயநினைவிழந்த செயல் என்னை போதை பிரச்னையில் இருந்து காப்பாற்றியது, அந்த வாழ்க்கை முடிந்து விட்டது. ஒருபோதும் அதனை திரும்பிப் பார்க்கமாட்டேன்,” என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: புளூ டிக் குறியீட்டை பறிக்க புதிய யுக்தி ..! ஆட் குறைப்பு..! எலான் மஸ்கின் அதிரடி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....