Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு படத்தின் 'அம்மா' பாடல்; வெளியான முன்னோட்ட வீடியோ!

    வாரிசு படத்தின் ‘அம்மா’ பாடல்; வெளியான முன்னோட்ட வீடியோ!

    வாரிசு படத்தின் மூன்றாவது பாடலின் முன்னோட்ட வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுத, சின்னக்குயில் சித்ரா இந்த மூன்றாவது பாடலை பாடியுள்ளார். ‘அம்மா’-வை அடிப்படையாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளதாக படக்குழு முன்பே அறிவித்திருந்தது. 

    இந்நிலையில், வாரிசு படத்தின் மூன்றாவது பாடலின் முன்னோட்ட வீடியோ தற்போது வெளிவந்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

     

     

    தொடரும் கொரோனா உயிரிழப்புகள்; சீன அரசு மூடிமறைக்கிறதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....