Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு படத்தின் விற்பனை மட்டுமே இத்தனை கோடியா? - ரிப்போர்ட் இதோ..

    வாரிசு படத்தின் விற்பனை மட்டுமே இத்தனை கோடியா? – ரிப்போர்ட் இதோ..

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ.295 கோடி வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம்தான், வாரிசு. இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். 

    ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு திரைப்படமானது திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் வியாபரங்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    அதன்படி, வாரிசு திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 225 கோடி ஆகும். இதில் நடிகர் விஜய்யின் சம்பளம் மட்டுமே 125 கோடி என்று கூறப்படுகிறது. வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமத்தை 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் 70 கோடிக்கு வாங்கியுள்ளது. 

    இதுமட்டுமல்லாது, வாரிசு திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமை 6 கோடிக்கும், கர்நாடகா உரிமை 8 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. மேலும், வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமை 35 கோடிக்கும், இந்தி உரிமை  34 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது. 

    வாரிசு படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளது. டிஜிட்டல் உரிமையை வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை 5 ஆண்டுகளுக்கு மட்டும் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு 75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி 57 கோடிக்கு வாங்கியுள்ளது. 

    வாரிசு திரைப்படத்தை இப்படத்தின் தயாரிப்பாளரே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் செய்ய உள்ளதால் அங்கு மட்டும் வாரிசு திரைப்படம் விற்கப்படவில்லை. மொத்தத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகும் முன்பே 296 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேண்டுமா? – 2கே கிட்ஸுக்கு வந்த அரிய வாய்ப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....