Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு அப்டேட்; 'ரஞ்சிதமே' வரிசையில் வெளியாகவுள்ள தீ பாடல்...

    வாரிசு அப்டேட்; ‘ரஞ்சிதமே’ வரிசையில் வெளியாகவுள்ள தீ பாடல்…

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் இரண்டாம் பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம்தான், வாரிசு. இயக்குநர் வம்சி இயக்க, தமன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, வாரிசு திரைப்பட வெளியீட்டுக்கான வேலைகள் மும்மரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. 

    இதனிடையே, வாரிசு திரைப்பட போஸ்டர்களும், ‘ரஞ்சிதமே’ எனும் பட பாடலும் வெளிவந்து ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதேசமயம், அவ்வபோது வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் லீக் ஆவதால் ஏமாற்றத்திலும் அவர்கள் உள்ளனர். 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வாமக வெளிவந்துள்ளது. அதன்படி, ‘தீ’ என பெயரிடப்படுள்ள அப்பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, சமூகவலைதளம் வாரிசு திரைப்படத்தின் பேச்சுகளால் நிரம்பியுள்ளது. வெளியாகவுள்ள பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. தீ எனப் பெயரிடப்பட்டுள்ள பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். 

    வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த துணை நடிகர் காலமானார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....