Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியான 'ஜிமிக்கி பொண்ணு' பாடல்; அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்!

    வெளியான ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடல்; அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்!

    வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி ஜிமிக்கிப் பொண்ணு’ பாடலின் வீடியோ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

    இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான், வாரிசு. தில் ராஜூ தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.

    இருப்பினும், வாரிசு திரைப்படத்தின் வசூல் துளியும் பாதிக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, வாரிசு திரைப்படம் ரீலிஸாகி 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி ஜிமிக்கிப் பொண்ணு’ பாடலின் வீடியோ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடலில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடனம் அதிகளவில் பேசப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யின் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    இப்பாடலை, பிரபல இசையமைப்பாளர் அனிரூத்துடன் இணைந்து, ஜோனிடா காந்தி பாடியுள்ளார். இப்பாடலின் வீடியோ ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், பாடலின் முழு வீடியோவும் வெளியாகவில்லை என ரசிகர்கள் அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....