Wednesday, May 8, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் வாரிசு பட ரிலீஸில் மாற்றம்..

    விஜய்யின் வாரிசு பட ரிலீஸில் மாற்றம்..

    விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் மூன்று நாட்கள் தாமதமாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். மேலும், இயக்குநர் வம்சி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

    முழுக்க முழுக்க குடும்பம் மற்றும் ஆக்‌ஷன் கலந்த வெகுஜன திரைப்படமாக உருவாகியுள்ள வாரிசு படத்தில் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும், திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெறும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது, வாரிசு திரைப்படத்தின் முன்பதிவுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் சிக்கல் எழுந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு திரைப்படம் வருகிற 11-ஆம் தேதி வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அம்மொழியின் நேரடி திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதனால், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தெலுங்கில் பால கிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி 12-ஆம் தேதியும், சீரஞ்சிவியின் வால்டர் வீரய்யா 13-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ‘என் பெயரில் வரும் பொய்யான…..’ – திருச்சிற்றம்பலம் இயக்குநர் ட்விட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....