Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'தமிழ்நாட்டை' ஒதுக்கிய ஆளுநர் உரை; கண்டித்த ஸ்டாலின்.. கிளம்பிய ஆளுநர்

    ‘தமிழ்நாட்டை’ ஒதுக்கிய ஆளுநர் உரை; கண்டித்த ஸ்டாலின்.. கிளம்பிய ஆளுநர்

    சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இருந்து பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.

    2023-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஆளுநரின் இன்றைய உரை முக்கியமாக பார்க்கப்பட்டது. 

    அதன்படியே, இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளை படிக்காமல் அவர் புறக்கணித்துள்ளார். இத்துடன், தமிழ்நாடு என்று வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், ஆளுநரின் உரை குறித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அதில் அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று கண்டனம் தெரிவித்தார். ஆளுநரை முதல்வர் விமர்சித்தார். இதனால் சர்ச்சை எழுந்தது. 

    இதனால், தேசிய கீதம் இசைத்து கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. 

    இந்தியாவின் ஐபிஎல் பாணியில் தென்னாப்பிரிக்காவில் புதிய கிரிக்கெட் போட்டி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....