Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமைச்சருக்கு ஓராண்டு சிறை

    சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமைச்சருக்கு ஓராண்டு சிறை

    சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு வழங்கி கான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உத்தர பிரதேச அரசில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக ராகேஷ் சச்சன் பதவி வகிக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டில் அவரது வீட்டில் இருந்து உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

    இதுதொடர்பாக கடந்த 31 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அவர், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ராகேஷ் சச்சனுக்கு ஓராண்டு வழங்கி கான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சராக இருப்பவர் ராகேஷ் சச்சன். 1990-களில் சமாஜ்வாதி கட்சியில் இருந்த ராகேஷ் சச்சன், ஃபதேபூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்றவர். சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸுக்கு சென்றார். பின்னர், பாஜகவில் இணைந்தார்.

    ராகேஷ் சச்சன் மீதான சட்டவிரோதமாக ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில், 30 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. இதில், இவருக்கு கடந்த 6-ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விபரத்தை அறிந்தவுடன், நீதிமன்றத்தில் இருந்து ராகேஷ் தலைமறைவாகி விட்டார்.

    பின், தனது வழக்குரைஞர்களுடன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ததோடு, ரூ.1,500 அபராதமும் விதித்தது.

    இருப்பினும், ராகேஷ் உடனடியாக ஜாமின் பெற்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, ரூ.50,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக, கருத்து தெரிவித்த ராகேஷ் சச்சன், சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில ஊடகங்கள் தவறாக சித்தரித்து எழுதுகின்றன என்றார். மேலும். தான் தலைமறைவாகவில்லை என்றும் தம்மைப் பற்றி வதந்திகளை சில ஊடகங்கள் கிளப்பிவிடுவதாகவும் மற்றும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிஷாத் கட்சித் தலைவரான சஞ்சய் நிஷாத்தும் வழக்கு ஒன்றில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் நிஷாத்துக்கு எதிரான வழக்கில் கோரக்பூர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....