Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்து மதத்தை புண்படுத்தியதாக உத்தரபிரதேசத்தில் ஒருவர் கைது!

    இந்து மதத்தை புண்படுத்தியதாக உத்தரபிரதேசத்தில் ஒருவர் கைது!

    உத்தரபிரதேச மாநிலத்தில் இந்து மதக் கடவுள் படம் இடம்பெற்றுள்ள காகிதத்தில் இறைச்சியை வைத்து கொடுத்ததாக காவல்துறையினர், தாலிப் உசேன் என்பவரை கைது செய்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் சம்பாலில் வசித்து வருபவர் தாலிப் உசேன். இவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். தாலிப் உசேன், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காகித்தில் வைத்து இறைச்சியை வழங்கி உள்ளார். 

    இந்நிலையில், இந்துமதக் கடவுள்கள் படம் அடங்கிய காகிதத்தில் இவர் இறைச்சியை வழங்கி, இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் தாலிப் உசேன் கடைக்குச் சென்றுள்ளனர். 

    இந்தக் புகாருக்கு தாலிப் உசேன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தாலிப் உசேனை விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால், அந்நேரத்தில் தாலிப் உசேன் காவல்துறையினரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. 

    இது தொடர்பாக, காவல்துறையினர் தாலிப் உசேனை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

    கைதான தாலிப் உசேன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ (மதம், இனத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்கவித்தல்), 295ஏ (வேண்டுமென்றே மத உணர்வுகளை அவமதித்து சீற்றத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 307(கொலை செய்ய முயற்சி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    அமராவதி கொலை வழக்கு – என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....