Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு: அன்புமணியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

    மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு: அன்புமணியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

    சேலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள எட்டு புறவழி சாலைகள், நனவு வழி சாலைகளாக மாற்றப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடப்பது குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க புறவழிச்சாலைகளை 4 வழிச் சாலைகளாக விரிவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின்கட்கரி அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.

    அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுதியுள்ள நவம்பர் 2-ஆம் தேதியிட்ட  கடிதத்தில், ‘‘ சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள புறவழிச்சாலைகளை 4 வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் எழுதிய கடிதம் குறித்து ஆய்வு செய்தோம்.

    அதனடிப்படையில், சேலம் & உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்காக பணி ஒப்பந்தத்தின்படி அந்த நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச்சாலைகளும், அதில் உள்ள கட்டமைப்புகளும் அந்த தேசிய நெடுஞ்சாலையை அமைத்த நிறுவனத்தால் 4 வழிச்சாலைகளாக விரிவாக்கப்பட வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

    தேசிய நெடுஞ்சாலை திட்ட பணி ஒப்பந்தத்தின் 11-ஆவது ஆண்டு நிறைவுக்குள் புறவழிச்சாலைகளை  4 வழிச்சாலைகளாக்கும் பணிகள் திருப்திகரமாக முடிக்கப்பட வேண்டும். அதன்படி 6 புறவழிச்சாலைகளை  விரிவாக்கும் பணிகள் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்; மீதமுள்ள இரு புறவழிச்சாலைகளை விரிவாக்கும் பணிகள் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

    இதுதவிர, சேலம் – உளுந்தூர் தேசிய நெடுஞ்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, சாலை அறிவிப்பு பலகைகள், பிரதிபலிப்பான்கள், சாலையோர தடுப்புத் தூண்கள்,  சாலைகள் சந்திக்கும்/பிரியும்  இடங்களில் அதற்கான குறியீட்டுக் கோடுகள், முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர மின் விளக்குகள்,  சாலையோர விளக்குகள் போன்றவை சாலையை அமைத்து பராமரிக்கும் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளன. 

    சாலை பாதுகாப்புக்காக வேறு ஏதேனும் நடவடிக்கைகள் தேவை என்றால் அவை குறித்து பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது தனியாகவோ அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    பராமரிப்பு பணியால் சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் ரத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....