Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமத்திய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு கொரோனா தொற்று

    மத்திய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு கொரோனா தொற்று

    மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், முக்கிய பிரபலங்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். 

    இந்நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) கண்டறியப்பட்டது. அதனால், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இதன்காரணமாக, வரலாற்று சிறப்புமிக்க புதிய குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 25) நடைபெற்ற சில வழக்குகளில் காணொளி காட்சி மூலமாக பங்கேற்றார்.

    அமெரிக்காவில் இரு குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....