Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும்- உள்துறை அமைச்சகம்

    தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும்- உள்துறை அமைச்சகம்

    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) மக்களுக்கு எதிரான குற்றங்களின் மீது பதியப்படும் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) கால தாமதம் இன்றி பதிவு செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளிடம் ஜூன் 30 தேதியன்று கேட்டுக்கொண்டது.

    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) மக்களுக்கு எதிரான குற்றங்களின் மீது பதியப்படும் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) கால தாமதம் இன்றி பதிவு செய்யுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம், ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இரண்டு மாதங்களுக்கு மேலாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நிலுவையில் இருக்கும் வழக்குகளை உண்ணிப்பாக கவனிக்குமாறும் தெரிவித்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு, அந்த வழக்குகளில் ஈடுப்பட்டுள்ள காவலர்கள் மற்றும் சாட்சிகளை சரியாக பராமரிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனக் கூறியது.

    60 நாள்களுக்கும் மேலாக விசாரணையில் இருக்கும் வழக்குகளை ஒவ்வொரு மாநில அரசும் கண்காணிக்க வேண்டும் எனவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழக்குகள் பற்றிய விவரங்களை கண்காணிக்கவும், வழக்குகளை விரைந்து முடிக்க அவசியப்பட்டால் சிறப்பு டிஎஸ்பிக்களை நியமித்துக்கொள்ளவும் ஒன்றிய அமைச்சகம் கூறியது.

    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, உயிரிழப்போ பொருளிழப்போ ஏற்படாத வகையில் அந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாநில அரசுகளை, ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுப்பதற்கு 1989ம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் (POA) எனப்படும் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு 2015ம் ஆண்டு இந்த சட்டம் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த சட்ட திருத்தத்தின் மூலம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் தலை முடியை மழித்தல், மீசையை மழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுப்படுவோருக்கான தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் மேலும் திருத்தப்பட்டு 18ஏ என்னும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இந்த பிரிவின் படி, முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்வதற்கு முன்பாக செய்யப்படும் முன்கட்ட விசாரணை, குற்றவாளியை கைது செய்வதற்கு உயர் அதிகாரியை நாடுவது போன்றவை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    கல்வி நிறுவனங்களில் பொதுவான ஆடை- வழக்கு ஒத்திவைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....