Monday, March 25, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மோதலில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் - வெளிவந்த தகவல்..

    மோதலில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் – வெளிவந்த தகவல்..

    சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும், உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். 

    இப்படத்தில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார்.மேலும், இப்படத்தில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். 

    மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் மாவீரன் படமானது ஜூன் மாதம் 29-ஆம் தேதி பக்ரித் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

    இதே தேதியில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்கு பின் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி உள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. 

    மாவீரன், மாமன்னன் இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் பக்ரீத் அன்று சினிமா ரசிகர்களுக்கு விருந்து இருக்கும் என்று பேசப்படுகிறது. 

    பிரேமம் இயக்குநருடன் கைகோர்க்கும் இசைஞானி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....