Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அமைச்சராக உதயநிதிக்கு பக்குவம் தேவை: ரிஸ்க் எடுக்கத் தயங்கும் ஸ்டாலின்!

    அமைச்சராக உதயநிதிக்கு பக்குவம் தேவை: ரிஸ்க் எடுக்கத் தயங்கும் ஸ்டாலின்!

    திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முழுமையடைந்துள்ள நிலையில், மு.க. ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினை, அமைச்சராக்க வேண்டும் என்பது தான் திமுக அமைச்சர்களின் விருப்பமாக உள்ளது. இதற்கான பேச்சுகள் பல மாதங்களாக பேசப்பட்டு வந்த நிலையில், அன்பில் மகேஷ் உதயநிதியை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றினார். இப்போது, உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தான் அனைவருடைய எதிர்ப்பார்ப்பாக உள்ளது. ஒருவேளை உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க நினைத்தால், அமைச்சரவையை மாற்றி வைக்க வேண்டியதும் அவசியம்.

    இதுபற்றி செய்தியாளர்கள் நீங்கள் அமைச்சராக வேண்டும் என்று, உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் விரும்புகிறார்களே என்று உதயநிதியிடம் கேட்டபோது, அவர் பதில் ஏதும் கூறாமல் சிரித்தே சமாளித்து விட்டார்.

    உதயநிதியை அமைச்சராக்கி விட்டால், வாரிசு அரசியல் மீண்டும் அரங்கேறி விடும் மற்றும் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே தன் மகனை அமைச்சராக்கி விட்டார் ஸ்டாலின் என்ற விமர்சனங்கள் நிச்சயம் எழும். இதனை மனதில் வைத்து தான் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறார். அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கொடுத்தால், அது அவருக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்றும், முதலில் உதயநிதியை சுமையில்லாத துறைக்கு அமைச்சராக்கி விட்டு, அனுபவம் பெற்ற பிறகு பெரிய இலாகாவைத் தரலாம் என்றும் திமுகவின் ஒருதரப்பு கூற, அதையும் மறுத்து விட்டார் ஸ்டாலின்.

    உதயநிதியை அமைச்சராக்க சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதேபோல, மற்ற அமைச்சர்களும் தங்கள் மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டனர். இந்நிலையில், எனக்காக யாரும் கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என்றும், எந்த சூழலில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்குத் தெரியும் என்றும் அறிக்கை வாசித்தார் உதயநிதி ஸ்டாலின்.

    தற்போதைக்கு அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் உதயநிதி ஸ்டாலினுக்கே இல்லை. அமைச்சர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதில் வரும் கஷ்டத்தை சமாளிக்க அனுபவமும், பொறுமையும் வேண்டும். உதயநிதி அமைச்சரானால், அவர் சார்ந்த துறையில் ஏற்படும் பிரச்சினைகளை மற்ற கட்சியினர் உற்றுநோக்கி, விமர்சித்து வருவார்கள். அதனை சமாளிக்கும் அளவுக்கு உதயநிதிக்கு பக்குவம் வர வேண்டும். இந்நிலையில், அமைச்சரவையில் நுழையும் அளவுக்கு உதயநிதிக்கு பக்குவம் இன்னும் வரவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இளையராஜா – மணிரத்னம்; இரு பெரும் தமிழ் திரையுலக ஆளுமைகளின் பிறந்த நாள்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....