Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உண்டியல் சேமிப்பை ராகுல் காந்தியின் பாத யாத்திரை செலவுக்கு கொடுத்த சிறுவன்

    உண்டியல் சேமிப்பை ராகுல் காந்தியின் பாத யாத்திரை செலவுக்கு கொடுத்த சிறுவன்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையின் போது சிறுவன் ஒருவன் அவருக்கு உண்டியல் சேமிப்பை அளித்தார். 

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவருடன் யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவன் அவருடன் நடந்து சென்றார். 

    அப்போது அந்தச் சிறுவன், அனைவரையும் அரவணைத்து செல்வதால், உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என ராகுல்காந்தியிடம் தெரிவித்தார். மேலும், அந்தச் சிறுவன் தனது பெற்றோர் தினமும் அளித்த பணத்தை உண்டியலில் சேமித்து வைத்ததை அளித்தார். மேலும், அந்தச் சிறுவன் இந்தப் பணத்தை நடைபயண செலவுக்கு பயன்படுத்துமாறு தெரிவித்தார். பிறகு ராகுல்காந்தி அதை பெற்றுக்கொண்டார். 

    இது தொடர்பான காணொளியை ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “தியாகமும் சுயநலமின்மையும் குழந்தைப் பருவத்தில் இருந்து கிடைத்த நல்ல பண்புகள். இந்த உண்டியல் எனக்கு விலைமதிப்பற்றது. இது மகத்தான அன்பின் பொக்கிஷம்” என குறிப்பிட்டுள்ளார் 


    ‘அப்பத்தா’ பாடலைத் தொடர்ந்து வடிவேலு குரலில் வெளிவந்த மற்றொரு பாடல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....