Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா2 நாட்கள் பயணமாக திருப்பதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்

    2 நாட்கள் பயணமாக திருப்பதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்

    குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று முதன் முதலாக திரௌபதி முர்மு 2 நாட்கள் பயணமாக திருப்பதிக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். 

    குடியரசுத் தலைவராக பதவியேற்று திரௌபதி முர்மு முதல் முறையாக நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் பயணமாக திருப்பதிக்கு செல்ல உள்ளார். 

    இந்நிலையில் குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெங்கட்ரமண ரெட்டி தலைமை தாங்கினார். அப்போது அவர், குடியரசுத் தலைவர் திருப்பதி வருவதாகவும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். 

    மேலும் அவர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விசாகப்பட்டினத்தில் இருந்து இரவு 8.40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து இரவு 9.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, திருமலைக்கு செல்கிறார். திருமலையில் தங்கி ஓய்வு எடுத்ததும் நாளை மறுநாள் காலை 9.25 மணிக்கு வராஹ சாமி மற்றும் வெங்கடாசலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். 

    பிறகு அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்கிறார். மேலும் அங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதனால் மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பபு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

    புரோ கபடி போட்டி; அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தரபிரதேச யோதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....