Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுநான்காவது நாள் ஆட்டத்தில் பறிப்போகும் விக்கெட்டுகள்!

    நான்காவது நாள் ஆட்டத்தில் பறிப்போகும் விக்கெட்டுகள்!

    ஐந்தாவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் குவித்தது. 

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்தின் ப்ரமிங்காம் நகரில் 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

    அதன்படி, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி 284 ரன்கள் குவித்தது. 

    இதன்பிறகு, நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய இந்திய அணி  களமிறங்கியது. அப்போது, தொடக்க ஆட்டக்காரர்களாக சத்தீஸ்வர் புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இருவரில், சுப்மன் கில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தனது ஆட்டத்தை இழந்தார். சத்தீஸ்வர் புஜாரா தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    இதன்பிறகு களமிறங்கிய ஹனுமா விஹாரி 44 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களத்துக்கு வந்த விராட் கோலியும் 40 பந்துகளுக்கு 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின் படி,  இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் குவித்தது. சத்தீஸ்வர் புஜரா 50 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், தற்போது நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளின் ஆட்டத்தில் சத்தீஸ்வர் புஜரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே நிதானமாகத் தங்களின் ஆட்டத்தைத் தொடங்கினர். 

    ஆனால், புஜரா 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தார். தற்போதைய நிலவரப்படி, ரிஷப் பண்ட் 57 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    தற்காலிக ஆசிரியர் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....