Saturday, April 27, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியானது, 'தீ தளபதி' பாடல்; வீடியோ உள்ளே!

    வெளியானது, ‘தீ தளபதி’ பாடல்; வீடியோ உள்ளே!

    வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீ தளபதி’ பாடலின் வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

    இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான், வாரிசு. தில் ராஜூ தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.

    இருப்பினும், வாரிசு திரைப்படத்தின் வசூல் துளியும் பாதிக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, வாரிசு திரைப்படம் ரீலிஸாகி 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 300 கோடி வசூலை வாரிசு திரைப்படம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீ தளபதி’ பாடலின் வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார். 

    தீ தளபதி பாடல், படம் ரிலீஸாகும் முன்பு வெளியாகிய நேரத்திலே இப்பாடலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, வீடியோ வடிவில் வெளியாகிய இப்பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    மீண்டும் ஆட்டக்களத்தில் ஜடேஜா; குஷியில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....