Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அடிச்சிகாட்டுங்கடா பாப்போம் யாரு பெரிய ஆளுனு - அண்ணா பிறந்தநாள் மோதல்

    அடிச்சிகாட்டுங்கடா பாப்போம் யாரு பெரிய ஆளுனு – அண்ணா பிறந்தநாள் மோதல்

    மணப்பாறையில் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ,அவரது சிலைக்கு மரியாதையை செலுத்த சென்ற இடத்தில் அவர் யாருக்கு சொந்தம் என்று திமுக ,அதிமுக- வினரிடையே மோதல் ஏற்பட்டதால் ,அப்பகுதில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது .

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு திமுகவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் தங்களது கட்சி கொடியை வைத்தும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்க முயற்சி செய்தனர்.

    இதையும் படிங்க: கருணை வடிவமான காலை உணவு வழங்கும் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    இதனால் அங்கு இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணா எங்களுக்கே சொந்தம் என்று இரு கட்சி தொண்டர்களும் சொந்தம் கொண்டாடினர். பின்பு காவல்துறை இருதரப்பையும் சமாதானம் செய்து மாலை அணிவிக்க ஏற்பாடு செய்தனர்.

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர் என்று இவர்கள் எப்போது உணர்வர்களோ?

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா- அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கொண்டாட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....