Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய் - லோகேஷ் இணையும் 'தளபதி-67' .. இன்று நடைபெற்ற அந்த கோலாகலம்...

    விஜய் – லோகேஷ் இணையும் ‘தளபதி-67’ .. இன்று நடைபெற்ற அந்த கோலாகலம்…

    நடிகர் விஜய்யின் ‘தளபதி-67’ திரைப்படத்தின் பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சறுக்கலை சந்தித்தது. அதேசமயம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வெற்றியை சந்தித்தது. 

    இதைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகிவருகிறது. பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இருப்பினும், வாரிசு திரைப்படத்தைத் தாண்டி நடிகர் விஜய்யின் 67-ஆவது திரைப்படம் குறித்த பேச்சு என்பது தினந்தோறும் சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

    மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளது. 

    7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஏறத்தாழ இருவரும் இணைவது பல மாதங்களுக்கு முன்பே உறுதியாகவிட்டாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

    இந்நிலையில், விஜய்யின் 67-ஆவது திரைப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்தது. இதைத்தொடர்ந்து, தளபதி-67 என்ற தற்காலிக தலைப்பில் திரைப்படத்தின் பூஜை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், ‘தளபதி-67’ திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க அதீத வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘தளபதி-67’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கால்பந்து உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து…பலப்பரீட்சையில் பிரான்ஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....