Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பதற்றத்தை தணிக்க களமிறங்கிய அதிவிரைவு படையினர்!

    தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு… கோவையில் பதற்றத்தை தணிக்க களமிறங்கிய அதிவிரைவு படையினர்!

    கோவையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர். 

    கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செய்றகுழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. 

    இந்நிலையில், கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் அவர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை

    இதுமட்டுமல்லாது, பொள்ளாச்சி பா.ஜ.க பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசியிருக்கின்றனர். முக்கிய பிரமுகர்களின் வாகனங்களையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். மேலும், பா.ஜ.க பிரமுகர்கள் மூன்று பேருக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர். 

    இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவங்களால், கோவை மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, 100-க்கும் மேற்பட்ட அதிவிரைவு காவல் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....