Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதற்காலிக ஆசிரியர் பணி- இடைக்காலத் தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

    தற்காலிக ஆசிரியர் பணி- இடைக்காலத் தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

    தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

    தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது.

    ஆனால் இதில் சில முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் புகார்கள் எழுப்பிய நிலையில், இது தொடர்பான வழக்கில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

    ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியதன்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் நியமனத்தில் திருத்தம் செய்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நேற்று (ஜூலை 04) முதல் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

    ஆசிரியர்கள் நியமனத்துக்கு நீதிமன்ற தடை இருப்பதால், அதனை விலக்க தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. 

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும், அதில் என்ன அவசரம் இருக்கிறது, தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாமே என்பது போன்ற கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், ஏற்கனவே கூறியது போல ஜூலை 8ம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறிய, நீதிபதிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கான இடைக்காலத் தடையை நீக்க மறுப்பு தெரிவித்தனர்.

    ஆசிரியர்களை பணியமர்த்த மீண்டும் நெறிமுறைகள்- தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....