Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஐனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு - தமிழக அரசு

    ஐனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு – தமிழக அரசு

    ஐனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மதுரை பள்ளிப்பட்டியில் உள்ள ஶ்ரீ முத்தலாம்மன் கோயில் திருவிழாவில் வரும் 15-ம் தேதி மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

    இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ஐனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போன்றவை நடத்த அனுமதிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை , மகராஜன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

    தமிழகத்தில் பெரும்பாலும், தை-மாதத்தில் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போன்றவை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....