Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஆளுநர் - ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு தீவிரம்!

    அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஆளுநர் – ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு தீவிரம்!

    ராமேஸ்வரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனுஷ்கோடி, அப்துல் கலாம் வீடு மற்றும் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை புரிந்தார். கோயிலில் அதிகாலை ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டார். மேலும் அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் வைக்கப்பட்ட கலசத்தில் இருந்து புனித நீரானது கவர்னர் மீது தெளிக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தையும் குடும்பத்தோடு பார்த்து ரசித்தார்.

    அதனை தொடர்ந்து குடும்பத்தினருடன் தனுஷ்கோடியை சுற்றிப் பார்க்கச் சென்றார். கார் மூலமாக புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற கவர்னர் இரண்டு கடல் சங்கமிக்கும் பகுதியான அரிச்சல் முனை பகுதியை பார்வையிட்டார்.

    இதையடுத்து நேற்று மாலை முதல் தனுஷ்கோடியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆளுநர் வந்து செல்லும் வரை பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் தனுஷ்கோடியில் ஓட்டல் தொழில் செய்து வரும் பெண்கள் உணவு தயாரிப்பு பொருட்களை தலையில் சுமந்தபடி சுமார் 15 கிலோமீட்டர் நடந்தே சென்றனர். ஆளுநர் தனுஷ்கோடி வந்து சென்ற பின்பு பேருந்து சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டது.

    தனுஷ்கோடியை தொடர்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அவரை அப்துல் கலாம் அண்ணன் மகன் சலீம் வரவேற்று இல்லத்திற்குள் அழைத்துச் சென்று, அவர் பயன்படுத்திய பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்வையிட செய்தார். அதன் பின்னர் அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அங்குள்ள வருகைப்பதிவேட்டில் தன்னுடைய வருகையை பதிவு செய்தார்.

    இதையடுத்து அங்கிருந்து ராமநாதபுரம் புறப்பட்ட அவர், சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மதுரை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    வெளியூரிலிருந்து பஸ், கார் மற்றும் வேன்களில் வந்த பக்தர்களை ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகிலையே பேரி கார்டுகள் வைத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கோயிலுக்கு நடந்தே சென்றனர்.

    இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....