Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு; தமிழர் ஒருவர் பலி

    கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு; தமிழர் ஒருவர் பலி

    கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடல் அடிப்பாலாறு ஆற்றில் கரை ஒதுங்கியுள்ளது.

    சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்தப் பகுதி பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடம். இங்கு கடந்த 14 ஆம் தேதி இரவு கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த காரவடையான் ராஜா, செட்டிபட்டியை சேர்ந்த ரவி, இளையபெருமாள் ஆகியோர் படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த கார்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. 

    இதையடுத்து, அங்கிருந்த மீனவர்கள் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கிராம மக்கள் கொளத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

    இதனிடையே, காயம் அடைந்ததாக கூறப்படும் ராஜா, அவருடன் இருந்த இளையபெருமாள், ரவி ஆகிய மூவரும் மாயமாகினர். இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு இளையபெருமாள் மற்றும் ரவி ஆகியோர் வீடு திரும்பினர். இருப்பினும் ராஜா மட்டும் வீடு திரும்பவில்லை. 3 பேரும் மான் வேட்டையாட சென்றபோது சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கர்நாடக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்களின் படகில் இருந்து 2 மூட்டை மான் இறைச்சி, நாட்டுதுப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேற்று பெங்களூருவில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் இவர்கள் மீது மாதேஸ்வரன் மலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. 

    கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடல் அடிப்பாலாறு ஆற்றில் கரை ஒதுங்கியுள்ளது.

    மீண்டும் வெளியாகும் வாரிசு; குஷியில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....