Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர்

    நிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர்

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்தில் வேந்தருக்கு பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குதல், கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் சில விதிகளைத் திருத்துதல், பதவிக் காலத்தைக் குறைத்தல், உயர் கல்வித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநிலப் பல்கலைக்கழங்கங்களின் துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் ஆளுநரின் கையொப்பத்துக்காக நிலுவையில் உள்ளது.

    ஆளுநரை சந்திக்கும் போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழக முதல்வர் வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில், மேற்குறிப்பிட்ட 21 மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்டுள்ள மசோதாக்கள் பின்வருமாறு:

    தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் மசோதா

    தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் மசோதா

    தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி மசோதா

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மசோதா

    கூட்டுறவு சங்க திருத்த மசோதா

    தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மசோதாக்கள்

    தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு மசோதா

    தங்கள் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்கு, சிறையில் இருந்து கைதிகளை தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக, மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல் போன்ற மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    அதே சமயம், கூட்டுறவு சங்கத் தலைவர்களின் பதவிக் காலத்தை குறைக்க வகை செய்யும் சட்ட மசோதா, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கே அளிப்பது போன்ற மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....