Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை ராயப்பேட்டையில் நிலநடுக்கம்? - ஊழியர்கள் ஓட்டம்!

    சென்னை ராயப்பேட்டையில் நிலநடுக்கம்? – ஊழியர்கள் ஓட்டம்!

    சென்னையில் இன்று காலை 10.15 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக உறுதிபடுத்தாத தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த சில நாட்களில் இமாச்சல பிரதேசம், உத்தராகாண்ட், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் போன்ற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

    இந்நிலையில், இன்று  சென்னையில் இன்று காலை 10.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதனால், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    இதைத்தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த நிலநடுக்கம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

    மேலும், தனியார் நிறுவனத்துக்கு அருகில் ‘போர்’ போடும் பணி நடைபெற்றதால், அங்கு அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், அதை நிலநடுக்கம் என ஊழியர்கள் தவறாக நினைத்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். 

    ‘உத்தராகாண்டில் எந்நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம்’ – விஞ்ஞானி எச்சரிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....