Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சிம்புவின் பத்து தல; அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரிலீஸ் தேதி..

    சிம்புவின் பத்து தல; அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரிலீஸ் தேதி..

    நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைப்படம் வரும் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம்தான், ‘பத்துதல’. கன்னட மொழியில் வெளிவந்து பெரியளவில் ஹிட் அடித்த ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்தான், இந்த பத்து தல. 

    நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணகுமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், டீஜே, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படமானது முதலில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. 

    patthu thala

    ஆனால், அதன் பிறகு பத்து தல திரைப்படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் பெரியதாக வெளிவரவில்லை. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, பத்து தல திரைப்படம் வருகிற ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    குஜராத்தில் கோர விபத்து; பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....