Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவாட்ச்மேன்களை குறிவைத்து கொல்லும் 'கல் மனிதன்' - அச்சத்தில் மக்கள்

    வாட்ச்மேன்களை குறிவைத்து கொல்லும் ‘கல் மனிதன்’ – அச்சத்தில் மக்கள்

    மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து மூன்று பாதுகாவலர்கள் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் மக்ரோனியா-பாந்த்ரா சாலையில் தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தில் பாதுகாவலராக யுத்தம் ரஜாக் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் ரஜாக் உறங்கி கொண்டிருந்தபோது, அவர் தலையின் மீது யாரோ திடீரென கல்லைபோட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கொலையாளி யார் என்பதை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

    இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களே ஆன இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) காலை சாகரின் கலை மற்றும் வணிக கல்லூரியின் பாதுகாவலர் ஷம்பு சரண் துபே (60) என்பவரின் தலையிலும் கல்லைப்போட்டு யாரோ கொலை செய்ததாக கூறப்படுகிறது. கல்லூரி கேன்டீன் அருகே அவரின் சடலமும், அதன் அருகே ரத்தகறைப்பட்ட கல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தூபேவின் உடல் அருகே ஒரு சிம் கார்ட் இருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

    அந்த செல்போன், கடந்த சனிக்கிழமை பைன்சா என்ற பகுதியில் ஒரு சிறிய தொழிற்சாலைக்கு அருகில் பாதுகாவலராக பணியாற்றி வந்த கல்யாண் லோதி என்பவருடையது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடிக்கும்போது கல்யாண் லோதி கொலை செய்யப்பட்டிருந்தார். 

    இந்தக் கொலைகளுக்கு பின்னால் இருப்பவர் யார் என்று தெரியாமல் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெயர் அறியப்படாத அந்த கொலையாளியை ‘கல் மனிதன்’ (Stone Man) எனக் குறிப்பிடுவதாகவும், இந்தத் தொடர் கொலைகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    அனைத்துக் கொலைகளையும் இணைக்கும் ஒரு நூல், தாக்குதலின் நேரம் நடு இரவில் என்பதாலும், கட்டிட வளாகத்தில் உறங்கும் பாதுகாவலர்கள், கொலை ஆயுதங்கள் சுத்தி மற்றும் இரும்பு பொருள்கள் ஆகியவை உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

    மேலும், இந்த குறிப்புகளை வைத்து சாகர் காவல்துறை தலைமையகத்தில் கொலையாளியை பிடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், கொலையாளி சைக்கோ இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

    இந்த தொடர் கொலைகள் காரணமாக, அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....