Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா3 நாட்கள் மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    3 நாட்கள் மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் 3 நாட்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    மைசூரு- தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு கட்டண ரெயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்து உள்ளது. இதன்படி மைசூர்-தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வருகிற 4, 11 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும். 

    மறுமார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு கட்டண ரயில் (06254) நவம்பர் 5, 12, 19 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு மைசூர் சென்று சேரும். 

    இந்த சிறப்பு கட்டண ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

    இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இப்படியே போன அதிபர் ஆட்சிதான்! ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் – மம்தா ஆவேச பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....