Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசூப்பர் 4 சுற்று.. வெற்றி வாகை சூடிய இலங்கை..நாளை பழிதீர்க்குமா பாகிஸ்தான்?

    சூப்பர் 4 சுற்று.. வெற்றி வாகை சூடிய இலங்கை..நாளை பழிதீர்க்குமா பாகிஸ்தான்?

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ஜக்கிய அரபு எமிரெட்ஸில் ஆசியக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், சூப்பர் 4 சுற்றின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. 

    இந்த ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் பேட்டிங்கில் களம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 14 ரன்களுக்கும், கேப்டன் பாபர் ஆஸம் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து, ஃபகார் ஜமான்,  இஃப்திகர் அகமது ஆகியோர் தலா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 

    மேலும், குஷ்தில் ஷா 4 ரன்களுக்கும், முகமது நவாஸ்  26 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆசிஃப் அலி 0, ஹசன் அலி 0, உஸ்மான் காதிர் 3, ஹாரிஸ் ரௌஃப் 1 என விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. 

    இலங்கை சார்பில் பந்துவீச்சாளர்கள் வனிந்து ஹசரங்கா 3, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் தலா 2, தனஞ்ஜெய டி சில்வா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    மொத்தத்தில்,  பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 

    எதிர்பார்க்கப்பட்ட மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா டக் அவுட்டாக, தனஞ்ஜெய டி சில்வா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் இலங்கை அணி தடுமாறியது. ஆனால் மறுபுறத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதும் நிசங்கா நிதானமாக விளையாடினார். 

    இதைத் தொடர்ந்து, பானுகா ராஜபட்ச 24 ரன்களும், கேப்டன் டாசன் 21 ரன்களும் சேர்த்தனர். முடிவில், தொடக்க வீரர் பதும் நிசங்கா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55 ரன்களும் , வனிந்து ஹசரங்கா 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினர். 

    பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சாளர்கள் முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் தலா 2, உஸ்மான் காதிர் 1 விக்கெட் சாய்த்தனர். இறுதியில், இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து வென்றது.

    இந்த இரு அணிகளே மோதும் இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....