Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசிக்ஸர் மழை பொழிந்த ஸ்டோய்னிஸ்! டி20 உலககோப்பையில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    சிக்ஸர் மழை பொழிந்த ஸ்டோய்னிஸ்! டி20 உலககோப்பையில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12-வது சுற்றில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. 

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12-வது சுற்றில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் நேற்று மோதின. 

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக, பத்தும் நிசங்க 45 பந்துகளில் 40 ரன்ங்களும், சரித் அசலங்க 25 பந்துகளில் 38 ரன்களும், தனஞ்சய டி சில்வ 23 பந்துகளில் 26 ரன்களும் குவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 11 ரன்களிலும், மணிச்சேல் மார்ஷ் 17 ரன்களிலும், மேக்ஸ்வெல் 23 ரன்களிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்து வந்தாலும் மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    சிறந்த வீரரான மார்கஸ் ஸ்டோனிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இவர், 17 பந்திலேயே சதம் விளாசினார். இறுதி கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. 

    அதிரடி ஆட்டமாடிய ஸ்டோனிஸ் 18 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரிகள் மற்றும் 59 ரன்களுடனும், ஆரோன் பின்ச் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். 

    இதையும் படிங்க: சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு பிறப்பித்த அதிரடி உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....