Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவெளியானது ஜவான் டீசர்.. கம்பேக் கொடுப்பாரா ஷாருக்கான்..? அட்லீ சாதிப்பாரா?

    வெளியானது ஜவான் டீசர்.. கம்பேக் கொடுப்பாரா ஷாருக்கான்..? அட்லீ சாதிப்பாரா?

    ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஷாருக்கான் இறுதியாக நடித்த திரைப்படமான ஸீரோ 2018ம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களாக அவர் திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. 

    ஷாருக்கான் நடித்த படங்கள் வரிசையாக படுதோல்வினைச் சந்தித்திருந்த நிலையில், நல்ல கதைக்காக பல்வேறு இயக்குனர்களை அணுகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின. இந்தத் திரைப்படத்திற்கு டைகர் என்று முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்தது. கொரோனாவினால் படப்பிடிப்பு தாமதமான நிலையில், இன்று படத்திற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    இமயமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மிகவும் காயப்பட்ட நிலையில் இருக்கும் ஷாருக்கான் தனது தலையில் கட்டு போட்டு ஒரு பை முழுவதும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ரயில்வே நிலையத்தில் காத்திருப்பது போன்ற காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது.

    பல நாட்களுக்கு பிறகு இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள ஷாருக்கானின் மிரட்டலான தோற்றம் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தனது கனவு நினைவாகியிருப்பதாகவும், ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கப்போவது பெருமையாக உள்ளது என்றும், இந்த வாய்ப்பினை தமக்கு அளித்த நண்பர் அட்லீக்கு நன்றி என்றும் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மிகவும் உணர்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது என்றும், ‘உங்களது திரைப்படங்களைப் பார்த்து ரசித்து வளர்ந்த எனக்கு உங்களது திரைப்படத்தினை இயக்கம் வாய்ப்பு கிடைக்கும் என்று கனவிலும் நினைத்தது இல்லை.’ என்று இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்.

    அடுத்த வருடம் வெளியாகும் இந்த திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 3; உலக சைக்கிள் தினம்…வாங்களேன்! ஒரு ட்ரிப் போவோம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....